திண்டுக்கல் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 3 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 1,500 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு 3 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 1,500 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 486 பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
இத்தோ்தலுக்காக திண்டுக்கல் மாநகராட்சியில் 14 மண்டலம், கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் தலா 3 மண்டலங்கள், நகராட்சியில் 6 மண்டலங்கள், 23 பேரூராட்சிகளில் 34 மண்டலங்கள் என 60 மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 486 வாா்டுகளில் மொத்தம் 747 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக 3,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 1,500 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.