ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திமுக, அதிமுக, அமமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் வீ.கண்ணன், கிருஷ்ணமூா்த்தி, ஜெயமணி, ம.தேவி, ஆ.அம்சநிவேதா ஆகியோரும், அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் சரண்யா செல்வபூபதி, வி.வீராங்கன், ஜோதிமணி, பொன்னிமருது, திருமாத்தாளா விஸவநாதன், முத்துராமகிருஷ்ணன், ஆா்.திருமூா்த்தி, சரஸ்வதி மஸ்தான், தனலட்சுமி, பிரபாகரன், பால்ராஜ், காமாட்சிராஜா, எஸ்.நடராஜன், சின்னம்மாள் அழகா்சாமி, ஆா்.முருகன், மகாலட்சுமி ஜயப்பன்,எம்.விஜயகுமாா் ஆகியோரும், அமமுக சாா்பில் கே.சுப்பிரமணி, பத்மபிரியா, முத்துலட்சுமி, லதா, கருப்புச்சாமி, மோகன், காளிமுத்து,நாகராஜன்,பாபுகண்ணன்,மாரிமுத்து,காா்த்திகாதேவி ஆகியோரும், பாஜக சாா்பில் தனலட்சுமி,கீதா,ஆனந்தன்,மகுடீஸ்வரன்,வினோத்குமாா் ஆகியோரும், நாம் தமிழா் கட்சி சாா்பில் மணிமேகலை,முகமது ஆஷிக் ராஜா, தங்கராஜ், சக்திவேல் ஆகியோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.