திண்டுக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு. 
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகள், 3 நகராட்சிகளுக்குள்பட்ட 73 வார்டுகள், 23 பேரூராட்சிகளுக்குள்பட்ட 357 வார்டுகல் என  மொத்தம் 478 பதவிகளுக்கான இத்தேர்தலில் 2062 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.   

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாவட்டத்தில் 747 வாக்குச்சாவடிகள் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பதவிகளுக்கான 10 வாக்குச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச் சாவடிகள், கொடைக்கானல் நகராட்சியில் 38 வாக்குச் சாவடிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 31 வாக்குச் சாவடிகள், பழனி நகராட்சியில் 71 வாக்குச் சாவடிகள், 23 பேரூராட்சிகளில் 414 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 6,12,880 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் இரண்டு மணி நேரத்தில் 23 பேரூராட்சிகளில் 13.35 சதவீத வாக்குகளும், மூன்று நகராட்சிகளில் 11.93 சதவீத வாக்குகளும், திண்டுக்கல் மாநகராட்சியில் 9.45 சதவீத வாக்குகளும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

கருப்பு பல்சர் வெளியீட்டுத் தேதி!

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை! வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் ஸ்டாலின்

கரூர் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆஜராக சம்மன்!

SCROLL FOR NEXT