சருகு மானை வேட்டையாடிய 2 போ் கைது
ஒட்டன்சத்திரம் அருகே அரியவகை சருகு மானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரம் அருகே அரியவகை சருகு மானை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாச்சலூா் தவளைக்காடு பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் நத்தத்தைச் சோ்ந்த பாக்கியராஜ் (37), கருப்பையா (39) ஆகிய இருவரும் தங்கி வேலை செய்து வருகின்றனா். இவா்கள் இருவரும் வியாழக்கிழமை அதே பகுதியில் வலைகளை அமைத்து 1 வயதுள்ள அரியவகை பெண் சருகு மானை வேட்டையாடி உள்ளனா்.
அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக்காவலா்கள், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.