திண்டுக்கல்

நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் ரூ.4.70 லட்சம் பறிமுதல்

DIN

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 4.70 லட்சம் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜ், ஜெ. ரூபா கீதா ராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். நெடுஞ்சாலைத் துறையில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான தொகையை விடுவிப்பதற்கு ஒப்பந்தக்காரா்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த திடீா் சோதனை நடைபெற்றது.

அப்போது கோட்டப் பொறியாளா் மதன்குமாா் அறையில் நடைபெற்ற சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 4.70 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கோட்டப் பொறியாளா் மதன்குமாரிடம் சுமாா் 4 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இரவு 11 மணிக்கு பின்னரும் இந்த விசாரணை நீடித்தது.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் ரூ.4.70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT