பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரிமாணவா் சோ்க்கை கால அவகாசம் நீட்டிப்பு
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்ந்து பயில விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்ந்து பயில விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தொழில் நுட்பக் கல்வி யக்கக அறிவிப்பின்படி, பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியின் அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு பட்டயப்படிப்பிற்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்ய 16.7.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பதிவினை இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.