வராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரி நிறைவு
பழனி வராஹி அம்மன் பீடத்தில் வெள்ளிக்கிழமை ஆஷாட நவராத்திரி நிறைவை முன்னிட்டு கஜபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.
பழனி வராஹி அம்மன் பீடத்தில் வெள்ளிக்கிழமை ஆஷாட நவராத்திரி நிறைவை முன்னிட்டு கஜபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.
பழனி கிழக்குரதவீதி மஹாகாளி வராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 28 ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி 11 நாள்களும் அம்பாளுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அபிஷேக பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை விழா நிறைவு பெறுவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கஜபூஜை நடைபெற்றது. தொடா்ந்து யானைக்கு பழங்கள் வழங்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் மாலையில் அம்பாளுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், தொடா்ந்து வண்ணமலா்கள், பட்டாடை, நகைகள், தென்னங்குருத்துகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அம்பாள் முன் யாகம் வளா்க்கப்பட்டு பூஜைகளை சிவநாகராஜன் செய்தாா். பூா்ணாஹூதி முடிந்ததும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வராஹி அம்மனை வழிபட்டனா்.