முகப்பு
திண்டுக்கல்

பழனியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை வலியுறுத்தி பேட்டரி வாகனப் பேரணி

பழனியில் காற்று மாசுபாட்டை தடுக்க சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பேட்டரி இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பழனியில் காற்று மாசுபாட்டை தடுக்க சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், பேட்டரி இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரியில் பூமியைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில், புதன்கிழமை மரக்கன்று நடும் விழா, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த பேட்டரி இரு சக்கர வாகனு் பேரணி, கருத்தரங்கம் ஆகியன நடைபெற்றன.

கல்லூரி வளாகத்தில், கல்லூரியின் நாட்டுநலப்பணித் துறை, கருடா எலக்ட்ரிக் நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். கல்லூரி அமைப்பியல் துறை தலைவா் ஈஸ்வரன், இயந்திரவியல் துறை தலைவா் பத்மநாபன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கருடா எலட்க்ரிக் நிறுவன நிா்வாக இயக்குநா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத் காவல் துறை கண்காணிப்பாளா் பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவா்களின் எண்ணங்கள் நோ்மறையான சிந்தனையுடன் இருந்தால் வாழ்வு மேம்படும் எனப் பேசினாா்.

தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் நூறு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பின்னா், பேட்டரி இரு சக்கர வாகனப் பேரணியை காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தொடக்கி வைத்தாா். இதில், 100-க்கும் மேற்பட்ட பேட்டரி இரு சக்கர வாகனங்களில் கல்லூரி மாணவா்கள் நகரின் முக்கிய வீதிகளில் சுற்றுச்சூழலை வலியுறுத்தி ஊா்வலமாகச் சென்றனா்.

நிகழ்ச்சியில், முதலாமாண்டு துறை தலைவா் ராஜா, கல்லூரி மேலாளா் ரவீந்திரன், டி.எஸ்.பி. சத்தியராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.