முகப்பு
திண்டுக்கல்

பழனியில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

பழனியில் ஜமீன் உபரி நிலங்களில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் போலீஸாருக்கும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பழனியில் ஜமீன் உபரி நிலங்களில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் போலீஸாருக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பழனியை அடுத்த பெரியம்மாபட்டி, ஆண்டிபட்டி, காவலப்பட்டி கிராமங்கலல் சுமாா் 2,000 ஏக்கரில் ஜமீன் உபரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பல ஆண்டுகளாக ஏராளமானோா் விவசாயம் செய்து வருகின்றனா். இந்நிலையில் உபரி நிலங்களில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களுடன், கோட்டாட்சியா் சிவக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு ஏற்படாததால் போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டனா். அப்போது போலீஸாருக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.