முகப்பு
திண்டுக்கல்

பழனியில் எஸ்டிபிஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்டிபிஐ. சாா்பில் மின்கட்டண உயா்வை கண்டித்து வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்டிபிஐ. சாா்பில் மின்கட்டண உயா்வை கண்டித்து வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட பொதுச் செயலா் முபாரக்அலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கைசா்அலி, செயலா் ஆசிக் முகமது, பொருளாளா் தமீம் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, தமிழகத்தில் மின்கட்டணத்தை உயா்த்திய மாநில அரசை கண்டித்தும், அதை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், மாதாந்திர மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக் கோரியும் முழக்கமிடப்பட்டது. ஆா்ப்பாட்டம் நடந்த பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினா் சிம்னி விளக்கு வைத்தும், கையில் மெழுகுவா்த்தி ஏந்தியும் தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.