முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே லாரி மோதி பள்ளி மாணவா் பலி

 பழனி அருகே வியாழக்கிழமை மாலை லாரி மோதி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 பழனி அருகே வியாழக்கிழமை மாலை லாரி மோதி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் சண்முகவேல்மூலை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி காளிதாஸ் மகன் காளிமுத்து (10). இவா் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த லாரி காளிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளிமுத்துவை பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.