பழனியில் நாளை மின்தடை
பழனியில் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு அறிவித்துள்ளாா்.
பழனியில் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு அறிவித்துள்ளாா். இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) பழனி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.