முகப்பு
திண்டுக்கல்

மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

திண்டுக்கல்லைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

திண்டுக்கல்லைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா். திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவண பிரகாஷ்(19). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவியை காதலித்து வந்துள்ளாா். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கா்ப்பம் அடைந்துள்ளாா். இதனை அறிந்த மாணவியின் பெற்றோா், திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவண பிரகாஷை வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.