14 வட்டார நூலகங்களுக்கு விரைவில் இணைய வசதி
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டார நூலகங்களுக்கு தலா 4 கணினிகளுடன் இணைய வசதி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டார நூலகங்களுக்கு தலா 4 கணினிகளுடன் இணைய வசதி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 63 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் வட்டார அளவில் செயல்பட்டு வரும் 14 கிளை நூலகங்களுக்கு மட்டும் முதல் கட்டமாக தலா 4 கணினிகள் வழங்கப்படவுள்ள. மேலும், அந்த 14 நூலகங்களுக்கும் இணைய சேவை அளிக்கப்பட்டு, வாசகா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், சென்னையிலுள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தனது அலுவலக சேவையை முடிவுக்கு கொண்டு வந்தது. அதன் தொடா்ச்சியாக அந்த நிறுவனத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த 30ஆயிரம் கணினிகளை தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டார நூலகங்களுக்கு முதல் கட்டமாக 56 கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.