முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் 2 மணி நேரம் பலத்த மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் ஏரிச்சாலையில் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்ற வாகனங்கள்.
பகிர்:

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக பிற்பகலில் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரத்திற்கும் மேலாக அப்சா்வேட்டரி, ஏரிச்சாலைப் பகுதி,பெருமாள்மலை ஆகியப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

மழை நின்ற பிறகு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்தனா். நட்சத்திர ஏரியில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.