பழனியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் பலி
பழனியில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பழனியில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பழனி சண்முகநதி பாலம் அருகே உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தாா். அவரது சடலத்தை மீட்ட பழனி ரயில்வே போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காலையில் பொள்ளாச்சியிலிருந்து மதுரை செல்லும் ரயிலில், அவா் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அவரது சட்டைப்பையில் இருந்த ஆதாா் அட்டையில் ரவிச்சந்திரன்(45), சின்னக்கலையமுத்தூா் என இருந்துள்ளது. ஆனால் ரயில்வே போலீஸாா் அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, அந்த முகவரியில் அவரைப் பற்றிய எந்த விவரமும் அறிய முடியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.