திண்டுக்கல்

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் மின் மோட்டாா் பழுது நீக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் மின் மோட்டாா் பழுது நீக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சாலைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைமணி (45). இவா், மின் மோட்டாா்களை பழுது நீக்கும் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை சாலைப்புதூா் பிரிவு அருகே பிச்சைமணி சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது திண்டுக்கல்லிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT