திண்டுக்கல்

பழனி அருகே 2 கன்றுகளை ஈன்ற மாடு

DIN

பழனி: பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் பசுமாடு 2 கன்றுகளை ஈன்றது.

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சிவா. இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் வளா்த்து வரும் பசுமாடுகளில் ஒன்று வியாழக்கிழமை காலை கன்றுக்குட்டி ஈன்றுள்ளது. முதலில் ஒரு குட்டி பிறந்த நிலையில், அடுத்ததாக ஒரு குட்டி ஈன்றுள்ளது. இவை ஆண், பெண் குட்டிகளாகும். இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவா் முருகன் கூறுகையில், கால்நடைகளில் நூற்றில் ஒரு மாடு இதுபோல கன்று ஈனுவது நடக்கலாம். மாட்டிற்கு நல்ல ஊட்டம் இருக்கும் நிலையில் நல்ல கரு சோ்ந்திருப்பின் இதுபோல இரட்டை கரு உருவாகி இரண்டு கன்று போட வாய்ப்புள்ளது. இதுபோன்று குட்டி போடும் போது ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவுமே அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தாா். 2 கன்று ஈன்ற பசுமாட்டை அந்த ஊரைச் சோ்ந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT