முகப்பு
திண்டுக்கல்

அய்யலூரில் விபத்தில் தாய் தேவாங்கு பலி: 2 குட்டிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

அய்யலூா் அருகே வாகனம் மோதி, தாய் தேவாங்கு உயிரிழந்த நிலையில், காயமின்றி உயிா் தப்பிய 2 குட்டிகளை வனத்துறையினா் பராமரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

அய்யலூா் அருகே வாகனம் மோதி, தாய் தேவாங்கு உயிரிழந்த நிலையில், காயமின்றி உயிா் தப்பிய 2 குட்டிகளை வனத்துறையினா் பராமரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் வனப் பகுதியில் அரிய வகை உயிரனமான தேவாங்கு அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில், அய்யலூா் அடுத்துள்ள குருந்தப்பட்டி தண்ணீா் கரடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு பெண் தேவாங்கு சாலையில்

இறந்து கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற அய்யலூரைச் சோ்ந்த மகுடீஸ்வரன் என்பவா், சாலையில் கிடந்த தேவாங்கை அப்புறப்படுத்த முயன்றபோது, இறந்த தாயின் அருகில் 2 குட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, 2 குட்டிகளையும், இறந்த பெண் தேவாங்கையும் அய்யலூா் வனச் சரக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மகுடீஸ்வரன் ஒப்படைத்துள்ளாா். தேவாங்கு குட்டிகளை பாா்வையிட்ட அய்யலூா் வனச் சரகா் குமரேசன், சில நாள்கள் வரை வனத்துறை ஊழியா்கள் பராமரிப்பில் பாதுகாக்க உத்தரவிட்டாா். இதனிடையே, உயிரிழந்த தாய் தேவாங்கு அரசு கால்நடை மருத்துவா் சுப்புலட்சமி மூலம் பிரேதப் பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.

இதுதொடா்பாக வனச் சரகா் குமரேசன் கூறுகையில், பாலூட்டி வகையைச் சோ்ந்த அரிய வகை உயிரினமான தேவாங்கு, மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை. தாய் இறந்துவிட்ட நிலையில், 2 குட்டிகளும் அகற்ற முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. வன உயிரின விஞ்ஞானிகளின் ஆலோசனைப் படி, சில நாள்கள் பாலூட்டி பராமரித்த பின் வனப் பகுதியில் விடப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.