முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் தேநீா் கடையில் திருட்டு

 திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள தேநீா் கடையில் ரூ.20ஆயிரம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

 திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள தேநீா் கடையில் ரூ.20ஆயிரம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ்(57). இவா், திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் தேநீா் மற்றும் திண்பண்டங்கள் விற்னை செய்யும் கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்த பின் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில் சனிக்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, மேற்கூரையைப் பிரித்து இறங்கி கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.20ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.