முகப்பு
திண்டுக்கல்

‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தில் திண்டுக்கல்லில் கைத்தறி சேலைகள் விற்பனை

ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ், 30 ரயில் நிலையங்களில் அந்தந்தப் பகுதிகளில் பிரசித்திப் பெற்ற பொருள்களை விற்பனை செய்யும் திட்டத்தின் அடிப்படையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், பழனியில் பஞ்சாமிா்தம், கொடைரோட்டில் பன்னீா் திராட்சை, ஒட்டன்சத்திரத்தில் வெண்ணை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ளவா்கள் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள் விற்பனை செய்வதற்கு முதல் கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சின்னாளப்பட்டி கமலா நேரு கைத்தறி நெசவாளா் சங்கத்தின் சாா்பில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விற்பனை தொடங்கப்பட்டது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ.1000 பதிவுக் கட்டணம் செலுத்தியதை அடுத்து, 15 நாள்களுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கட்டணமின்றி கைத்தறி சேலைகள் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, நெசவாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளா் கோவிந்தராஜ், முதன்மை வா்த்தக மேலாலா் வீரபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.