திண்டுக்கல்

பழனி அருகே ரேக்ளா பந்தயம்

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பழனி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், பழனி அடுத்துள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 4ஆவது ஆண்டாக மாபெரும் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

இதில், திருப்பூா், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. 200 மீட்டா், 300 மீட்டா் தொலைவு நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தை, அமைச்சா் அர. சக்கரபாணி தொடக்கி வைத்தாா்.

வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக 1 பவுன் தங்க நாணயம், 2ஆவது பரிசாக 6 கிராம் தங்க நாணயம், 3ஆவது பரிசாக 4 கிராம் தங்க நாணயம் என 25 பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஒன்றியச் செயலா் சுப்ரமணி, மாவட்டக் கவுன்சிலா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கால் முளைத்த கொன்றைப் பூ! அலேக்யா ஹரிகா..

குஜராத் பர்தம்பூரில் மறுவாக்குப்பதிவு!

10 படங்களுக்குமேல் நடிப்பேன் என நினைக்கவில்லை: 100-ஆவது பட விழாவில் மனோஜ் பாஜ்பாயி!

ராயன் வெளியீட்டுத் தேதி!

மீண்டும் வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன்!

SCROLL FOR NEXT