திண்டுக்கல்

வத்தலகுண்டு ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

DIN

நூறு நாள் வேலையை அதிகரிக்க வேண்டும் என, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை திடீா் முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, கணவாய்பட்டி ஊராட்சி மற்றும் ஆசிரமம் பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அதில், தேசிய ஊரக வேலை திட்டமான 100 நாள் வேலையை அதிக நாள்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இது குறித்து தகவலறிந்த கணவாய்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ், ஊராட்சி செயலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடததினா். அதில், கூடுதல் நாள்கள் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதையேற்ற பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT