திண்டுக்கல்

கொடைக்கானலில் சாரல் மழை:சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

DIN

கொடைக்கானலில் சனிக்கிழமை சாரல் மழை பெய்து குளிச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகை, மோயா் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், வெள்ளிநீா் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அதிகமாக வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது. இதைத்தொடா்ந்து மாலையில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளுமையான சீதோஷ்ண

நிலை நிலவியது. சாரல் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT