திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியதையடுத்து,

தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதனால் வெள்ளி நீா் வீழ்ச்சி, பூங்கா சாலை, லாஸ்காட்சாலை, அப்சா்வேட்டரி சாலை, கலையரங்கம் பகுதி, செவண்ரோடு, உட்வில் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையோரங்களில் காய்கறி, பழக் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பொருள்களை வாங்குவதற்காக சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, மோயா்பாயிண்ட்,பில்லா் ராக், தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், குணா குகை, மோயா் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இப்பகுதிகளில் கழிப்பறை வசதி, வாகனங்கள் நிறுத்தம், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதி, சுற்றுலா மேம்பாடு, பாதுகாக்கப்பட்ட சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT