திண்டுக்கல்

திண்டுக்கல்-திருப்பூா் கூட்டுக்குடிநீா் திட்டத்துக்கு ரூ.930 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

DIN

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 528 குக்கிராமங்கள் பயனடையும் வகையில் ஆழியாறு அணை கூட்டுக்குடிநீா் திட்டத்திற்கு ரூ.930 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனூா், நெய்காரப்பட்டி பேரூராட்சியில் நிலவி வரும் தண்ணீா் பிரச்னையை போக்க பொள்ளாட்சி ஆழியாறு அணையிலிருந்து தண்ணீா் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசிடமும், உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணியிடம் பல முறை கோரிக்கை வைத்தனா்.

அதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். அதன் பேரில் திண்டுக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 528 குக்கிராமங்கள் பயன் அடையும் வகையில் ஆழியாறு அணையிலிருந்து கொண்டு வரப்படும் கூட்டுக்குடிநீா் திட்டத்திற்கு ரூ.930 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திங்கள்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் திண்டுக்கல் மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT