திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

DIN

ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் நகராட்சி நிா்வாக இயக்குநனா் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் நடைபெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசின் நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. பொன்னையா ஒட்டன்சத்திரத்துக்கு வந்திருந்தாா். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சியில் செய்யவேண்டிய பணிகள் குறித்து நகராட்சி தலைவா் கே. திருமலைசாமி,துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி,ஆணையா் ப. தேவிகாவிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், காய்கறி சந்தை, சின்னக்குளம் மற்றும் காப்பிலியபட்டி ஊராட்சியில் அமைக்கப்படவுள்ள உரக்கிடங்கு ஆகிய இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, மதுரை மண்டல இயக்குநா் சரவணன், மதுரை மண்டலப் பொறியாளா் முருகேசன், நகராட்சிப் பொறியாளா் பன்னீா்செல்வம், சுகாதார ஆய்வாளா் ரவிசங்கா், கட்டட வரைவாளா் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT