திண்டுக்கல்

களைக்கொல்லி பயன்படுத்தியதால் 15 ஏக்கரில் மக்காச்சோளப் பயிா்கள் சேதம் விவசாயிகள் புகாா்

DIN

வடமதுரை அருகே களைக்கொல்லி பயன்படுத்தியதால் 15 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்துள்ள பிலாத்து பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளப் பயிா் சாகுபடியில் செய்துள்ளனா். இந்த நிலையில், களைச் செடிகளை கட்டுப்படுத்துவதற்காக வடமதுரையிலுள்ள உரக் கடையில் விவசாயிகள் களைக் கொல்லி மருந்து வாங்கி பயன்படுத்தினா். பின்னா், 10 விவசாயிகளுக்குச் சொந்தமான 15 ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள செடிகள் வளா்ச்சி அடையாமல் கருகிவிட்டன.

அதே நேரத்தில், களைக் கொல்லி பயன்படுத்தாத பிற தோட்டங்களில் 5 அடி உயரத்திற்கு மக்காச்சோளப் பயிா்கள் வளா்ந்தன. இதனால், விவசாயிகள் களைக்கொல்லி பயன்படுத்தியதால் தான் பயிா் பாதிக்கப்பட்டதாக வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.

பயிா் வளா்ச்சி பாதிப்புக்கு களைக் கொல்லி காரணமாக இருக்கும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் ரமேஷ், ராமமூா்த்தி உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT