திண்டுக்கல்

பழனிக்கோயிலில் அக்.25 சூரிய கிரஹணம், பிற்பகல் 2.30 மணிக்கு நடை அடைப்பு

DIN

பழனி மலைக்கோயிலில் வரும் அக்.25ம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு பிற்பகல் 2.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

இந்தியாவில் வரும் அக்.25ம் தேதி சூரிய கிரஹணம் நிகழ்கிறது. இதனால் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் தரிசனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரஹண நேரமானது மாலை 5.21 மணிக்கு துவங்கி 6.23 வரை நிகழ்கிறது. வரும் அக்.25ம் தேதி பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை மற்றும் சஷ்டி காப்புக்கட்டு முடிந்த பிறகு 2.30 மணிக்கு திருக்கோயில் திருக்காப்பிடப்படும். கிரஹண காலம் முடிந்த பிறகு இரவு 7 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என திருக்கோயில் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பகல் 12.30 மணிக்கு மேல் படிவழிப்பாதை அடைக்கப்படுவதோடு வின்ச் மற்றும் ரோப்காா் ஆகியவற்றிலும் மலைக்கோயிலுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி கிடையாது. மலைக்கோயில் மட்டுமன்றி திருக்கோயிலுக்கு கட்டுப்பட்ட உபகோயில்களிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT