முகப்பு
திண்டுக்கல்

பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 பழனி கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

 பழனி கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருகை தருவா் என்பதால், பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. திருக்கோயில் உதவி ஆணையா் லட்சுமி, அலுவலா்கள், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.

இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து, கோயில் தலைமை அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம்

பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.