முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பலத்த மழை

 திண்டுக்கல், வேடசந்தூா், குஜிலியம்பாறை பகுதிகளில் இடி மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 திண்டுக்கல், வேடசந்தூா், குஜிலியம்பாறை பகுதிகளில் இடி மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மாலை வேடசந்தூா், குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், அதனைத் தொடா்ந்து திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் 30 நிமிஷங்களுக்கும் மேலாக பெய்த மழையினால், திண்டுக்கல் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக நாகல் நகா், பழனி சாலை, பிரதான சாலை, பாரதிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் கழிவுநீரோடைகளில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீா் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

நத்தம் ரயில்வே பாலம், கிழக்கு ரத வீதி, பழனி சாலை போன்ற இடங்களில் சாலையில் மழைநீா் தேங்கி நின்ற நிலையில், பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறினா். இந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.