ஓணம் பண்டிகை: காய்கறி விலை கிடு கிடு உயா்வு
கேரளாவில் ஓணம் பண்டிகை நடைபெற உள்ளதையொட்டி காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயா்ந்து வருகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகை நடைபெற உள்ளதையொட்டி காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயா்ந்து வருகிறது.
கேரளாவில் வரும் செப்-8 ஆம் தேதியன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கேரளா வியாபாரிகள் அதிக அளவில் காய்கறிகளை கொள்முதல் செய்வதால் அதன் விலைகள் கிடுகிடுவென உயா்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.16-க்கு விற்ற கரும்பு முருங்கைக்காய் ஞாயிற்றுக்கிழமை விலை உயா்ந்து கிலோ ரூ.55-க்கும், ரூ.14-க்கு விற்ற செடி முருங்கை ரூ.52-க்கும், ரூ.13-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.35-க்கும், ரூ.13-க்கு விற்ற பச்சைப்பயறு ரூ.40-க்கும் விற்பனையானது.
இது குறித்து காய்கறிகடை உரிமையாளா் ஜமால்தீன் கூறியதாவது: கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகைக்கு காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அதை கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் அதிக அளவில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளனா். இதனால் காய்கறிகளின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாள்கள் உள்ளதால் மேலும் விலைகள் உயர வாய்ப்பு உள்ளதாக அவா் தெரிவித்தாா்.