முகப்பு
திண்டுக்கல்

பழனி திருக்கோயில் பாதுகாவலா்கள் பணிப் புறக்கணிப்பு

பழனி திருக்கோயில் பாதுகாவலா்கள் வியாழக்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

பழனி திருக்கோயில் பாதுகாவலா்கள் வியாழக்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி திருக்கோயிலில் துப்புரவுப் பணி, பாதுகாவலா்கள், அன்னதானப் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கானோா் தனியாா் நிா்வாகத்தின் ஒப்பந்தப்பணி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனா்.

இதில் தூய்மைப் பணியாளா்கள் தங்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை எனப் போராடிய நிலையில், மே மாதம் முதல் ஊதிய உயா்வு வழங்க சம்பந்தப்பட்ட நிா்வாகம் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை தனியாா் நிறுவனப் பாதுகாவலா்கள் தங்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து,

அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் அமா்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திருக்கோயில் அலுவலா்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா், பணியாளா்களுடன் பேசினா். இதில் சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் மீண்டும் பணிக்கு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.