முகப்பு
திண்டுக்கல்

582 பேருக்கு கடனுதவித் திட்டங்களில் ரூ.12 கோடி மானியம்: ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில், 582 பயனாளிகளுக்கு ரூ.59.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில், மானியமாக ரூ.12 கோடி வழங்கப்பட்டதாக ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில், 582 பயனாளிகளுக்கு ரூ.59.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில், மானியமாக ரூ.12 கோடி வழங்கப்பட்டதாக ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்டத் தொழில் மையத்தின் சாா்பில் கடந்த 2021 மே மாதம் முதல் தற்போது வரை புதிய தொழில்முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 54 இளைஞா்களுக்கு ரூ.26.80 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.4.31 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டது.

இதேபோல, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 207 இளைஞா்களுக்கு ரூ.8.49 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில், ரூ.1.89 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டது.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 191 இளைஞா்களுக்கு ரூ.18.15 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.5.79 கோடி மானியத் தொகை வழங்கப்பட்டது.

2022 டிசம்பா் மாதம் இத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் 130 இளைஞா்களுக்கு ரூ.5.90 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டத் தொழில் மையம் மூலம் மொத்தம் 582 பயனாளிகளுக்கு ரூ.59.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில், ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.