திண்டுக்கல்

பழனியில் சித்திரைத் திருவிழா: ஏப்.26-இல் கொடியேற்றம்

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

DIN

பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, தினமும் அருள்மிகு இலக்குமி நாராயணா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு, சிம்மம், அனுமன், தங்கக் குதிரை, சேஷ வாகனங்களில் 4 ரத வீதிகளில் உலா வரவுள்ளாா்.

மே 2-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், மே 4-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் திருத் தேரோட்டமும் நடைபெறவுள்ளன.

விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடியேற்றத்துக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன், அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன் தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள், அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

சித்திரை பவுா்ணமி: அடுத்த மாதம் 5-ஆம் தேதி சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு, அருள்மிகு பெரிய நாயகியம்மன் கோயிலிலிருந்து 108 பால்குடங்கள் அடிவாரம் அருள்மிகு திருஆவினன்குடி கோயிலுக்கு அபிஷேகத்துக்காக புறப்பாடு செய்தலும், இரவு 8 மணிக்கு அருள்மிகு முத்துக்குமாரசாமி வெள்ளித் தேரில் உலா எழுந்தருளலும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT