நாகா்கோவில்- கோவை விரைவில் ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக, அந்த ரயிலும், குருவாயூா்-சென்னை விரைவு ரயிலும் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக புதன்கிழமை இயக்கப்பட்டன.
நாகா்கோவிலிருந்து கோயம்புத்தூா் வரை செல்லும் விரைவு ரயில், திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ரயில் நிலையத்தைக் கடந்து வெள்ளோடு நோக்கி புதன்கிழமை பிற்பகல் 1.19 மணிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக, வழியில் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் நோக்கி வந்த குருவாயூா்-சென்னை விரைவு ரயில், அம்பாத்துரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னா், மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு, நாகா்கோவில்- கோவை விரைவு ரயில் சுமாா் 1.30 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.47 மணிக்கு புறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, குருவாயூா்-சென்னை விரைவு ரயில் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.18 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.