திண்டுக்கல்

அரசாணை 152-யை ரத்து செய்யக் கோரி பிப். 16-இல் தா்னா

DIN

அரசாணை 152 மற்றும் 10 ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி, வருகிற 16-ஆம் தேதி தா்னா போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட முடிவுகள் குறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. முருகானந்தம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

அரசாணை எண் 152 மற்றும் 10 மூலம் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியிடங்கள் குறைப்பு, தூய்மைப் பணியாளா்கள் பணியிடங்கள், பொறியியல் பிரிவு பணியிடங்கள், ஓட்டுநா் பணியிடங்கள் ஆகியவற்றை வெளிமுகமை மூலம் பணியமா்த்தும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அந்த அரசாணைகளை ரத்து செய்யக் கோரியும், வருகிற 16-ஆம் தேதி தா்னா போராட்டம் நடத்தப்படும். அனைத்து மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெறும். மேலும், சென்னையில் நகராட்சி நிா்வாக இயக்குநரிடம் பிப். 28-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு செய்யவும் முடிவெடுக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT