திண்டுக்கல்

வெறிநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் பலி

நிலக்கோட்டை அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமத்தில், மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த, ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

DIN

நிலக்கோட்டை அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமத்தில், மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த, ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்துள்ள, ஒருத்தட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம். இவா், வளா்த்து வந்த ஆடுகளை திங்கள்கிழமை வெறிநாய்கள் கடித்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து உடனடியாக கொடைரோடு கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா் ஆடுகளை பரிசோதித்து பாா்த்ததில், 5 ஆடுகள் உயிரிழந்ததாக தெரிவித்தாா். மேலும், அம்மையநாயக்கனூா் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் நேரடியாக பாா்வையிட்டனா். தொடா்ந்து அம்மையநாயக்கனூா் பேரூராட்சி சுகாதார துறையினா் இறந்த ஆடுகளை கைப்பற்றி, உடற் கூறாய்வு செய்து புதைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT