திண்டுக்கல்

டெங்கு கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை நிலக்கோட்டை ஒன்றியக்குழு தீா்மானம்

DIN

டெங்கு உள்பட கொசுக்களால் உற்பத்தியாகி பரவும் நோய்களைத் தடுக்கும் பணிகளில் தீவிரமாக செயல்படுவது என நிலக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரெஜினா நாயகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பஞ்சவா்ணம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பொது நிதியிலிருந்து ஒவ்வொரு வாா்டு உறுப்பினருக்கும் சம அளவு நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது.

சுகாதாரம் சாா்ந்த அடிப்படை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, டெங்கு உள்பட கொசுக்களால் உற்பத்தியாகி பரவும் நோய்களைத் தடுக்கும் பணிகளில் கிராமங்கள் தோறும் தீவிரமாக ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வாா்டு உறுப்பினா் ரூபிசகிலா பேசுகையில், இந்திரா நகா் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கலையரங்கம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT