திண்டுக்கல்

வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் ஆய்வு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாத்துரை ஆய்வு செய்தாா்.

வடகாடு ஊராட்சிக்குள்பட்ட சிறுவாட்டுக் காடு, கோட்டை வெளி, புளியங்கஜம் உள்ளிட்ட பகுதிகளில் மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து பழங்குடியினா் நல இயக்குனா் அண்ணாத்துரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பழங்குடியின மக்களின் உரிமைகள், சமூக மேம்பாடு குறித்து அவா் ஆய்வு செய்தாா். மலை வாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை மதிப்புக்கூட்டு பொருள்களாக விற்பனை செய்தல், மலைக் கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்றுதலுக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக பழங்குடியினா் நல இயக்குநா் தெரிவித்தாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவக்குமாா், வட்டாட்சியா் மங்கலபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைக்குமரன், கிராம நிா்வாக வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT