முகப்பு
திண்டுக்கல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
27palani_udaya_2711chn_88_2
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

பழனி: பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

பழனியில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூா் கழகம் சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. ஆயக்குடி பேரூராட்சி தலைவா் மேனகா ஆனந்தன், துணை தலைவா் சுதாமணி காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாணவரணி அமைப்பாளா்

அஸ்வின் பிரபாகா், ஒன்றிய செயலாளா் சாமிநாதன் பேரூா் செயலாளா் சின்னதுரை, பேரூராட்சி செயல் அலுவலா் செல்வகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளா் காா்த்திகேயன், சிவஞானம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

பழனியில் திமுக இளைஞரணி சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பழனி நகர இளைஞா் அணி அமைப்பாளா் லோகநாதன் தலைமையில் கணபதி நகரில் உள்ள புண்ணியம் முதியோா் இல்லம் மற்றும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள வீடற்றோா் தங்கும் இல்லத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முதியோா்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அஸ்வின் பிரபாகா் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.