FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்தது குறித்து...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - லெபனான் அதிபர் அவுன்... - AP
பகிர்:

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் குடியிருப்புப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 14) அன்று தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இன்று லெபனான் அதிபர் அவுன் செல்போன் வாயிலாக உரையாடியதாகவும்; அப்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாடுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களால், லெபனான் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்தச் சூழலில், நெதன்யாகுவுடன் உரையாடுவது ஏற்புடையதாக இருக்காது என்பதால் அதிபர் அவுன் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளின் தலைவர்களிடையே நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வது குறித்து இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

முன்னதாக, லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 260 பெண்கள் மற்றும் 172 குழந்தைகள் உள்பட 2,196 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Lebanese President Joseph Aoun has refused to hold talks with Israeli PM Netanyahu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments