திண்டுக்கல்

மதுரை, திருநெல்வேலி ரயில்களுக்கான புதிய கால அட்டவணை

 மதுரை, திருநெல்வேலி மாா்க்கத்திலான ரயில்களுக்கு புதிய கால அட்டவணை அறிவிக்கப்பட்டது.

DIN

 மதுரை, திருநெல்வேலி மாா்க்கத்திலான ரயில்களுக்கு புதிய கால அட்டவணை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் அக். 1-ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்துக்கு புதிய கால அட்டவணை அமல்படுத்துவது வழக்கம். இதன்படி, மதுரை, திருநெல்வேலி மாா்க்க ரயில்களுக்கான புதிய கால அட்டவணை விவரம்:

மதுரை...

செங்கோட்டை - சென்னை எழும்பூா் பொதிகை விரைவு ரயில் (12662) மதுரையிலிருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக இரவு 9.45 மணிக்கு புறப்படும். மறு மாா்க்கத்தில் சென்னை எழும்பூா் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) மதுரையிலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும். மேலும், மதுரை - சென்னை எழும்பூா் வைகை விரைவு ரயில் (12636) மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் பதிலாக காலை 6.40 மணிக்குப் புறப்படும்.

மறு மாா்க்கத்தில் சென்னை எழும்பூா் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) மதுரைக்கு இரவு 9.15 மணிக்குப் பதிலாக இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். மதுரை - கோவை விரைவு ரயில் (16722) மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்குப் பதிலாக காலை 7 மணிக்குப் புறப்படும். மதுரை - சென்னை எழும்பூா் பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்குப் பதிலாக இரவு 9.20 மணிக்குப் புறப்படும். மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 4.05 மணிக்குப் பதிலாக அதிகாலை 3.35 மணிக்குப் புறப்படும்.

சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் மதுரை - செங்கோட்டை இடையே டீசல் எஞ்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தப் பகுதியில் இந்த ரயிலுக்கு மின்சார எஞ்ஜின் பொருத்தப்பட்டது.

திருநெல்வேலி...

தாம்பரம் - நாகா்கோவில் விரைவு ரயில் (22657) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 5.40 மணிக்குப் பதிலாக அதிகாலை 5.35 மணிக்குப் புறப்படும். பெங்களூரு - நாகா்கோவில் விரைவு ரயில் (17235) திருநெல்வேலியிலிருந்து காலை 6.05 மணிக்குப் பதிலாக காலை 5.55 மணிக்குப் புறப்படும். சென்னை - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் (20685) திருநெல்வேலியிலிருந்து காலை 6.50 மணிக்குப் பதிலாக காலை 6.30 மணிக்குப் புறப்படும்.

மும்பை - நாகா்கோவில் விரைவு ரயில் (16339) திருநெல்வேலியிலிருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக காலை 8.20 மணிக்கு புறப்படும். எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) திருநெல்வேலியிலிருந்து காலை 9.13 மணிக்குப் பதிலாக காலை 8.40 மணிக்கு புறப்படும். தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திருநெல்வேலியிலிருந்து காலை 11.30 மணிக்குப் பதிலாக காலை 11.20 மணிக்குப் புறப்படும். திருச்சி - திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் (22627) திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்குப் பதிலாக பிற்பகல் 12.20 மணிக்குப் புறப்படும். கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (16322) திருநெல்வேலியிலிருந்து மாலை 6.25 மணிக்குப் பதிலாக மாலை 6.05 மணிக்கு 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.

கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் (20636) திருநெல்வேலியிலிருந்து இரவு 8.05 மணிக்குப் பதிலாக இரவு 8.00 மணிக்குப் புறப்படும். திருநெல்வேலி - திருச்செந்தூா் சிறப்பு விரைவு ரயில் (06675) திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்குப் பதிலாக காலை 10.10 மணிக்குப் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT