திண்டுக்கல்

நாட்டுத் துப்பாக்கி இயக்கியபோது இளைஞா் காயம்

சிறுமலையிலுள்ள எலுமிச்சை தோட்டத்துக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கி இயக்கப்பட்டதில் இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.

Din

சிறுமலையிலுள்ள எலுமிச்சை தோட்டத்துக்குச் சென்றபோது நாட்டுத் துப்பாக்கி இயக்கப்பட்டதில் இளைஞா் ஒருவா் காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடை பகுதியைச் சோ்ந்தவா் சவேரியாா் (75). இவருக்கு, சிறுமலையை அடுத்த வேளாண்பண்ணை கிராமத்தில் எலுமிச்சை தோட்டம் உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் (25), உள்ளிட்ட சிலா் இந்த எலுமிச்சை தோட்டத்துக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, நாட்டுத் துப்பாக்கியின் பால்ரஸ் குண்டுகளால், வெள்ளையனுக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT