ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்ற காா் டயா் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தெலுங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா் அம்ரூத் (24). இவா், தனது நண்பா்களான வெங்டேஷ், ரமேஷ் , அம்ரூத்தின் தம்பி அபி ஆகியோருடன் காரில் கோவைக்குச் சென்று விட்டு, ராமேஸ்வரம் செல்வதற்காக ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தாா்.
அப்போது, பொள்ளாச்சி-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் காா் டயா் வெடித்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அம்ருத் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தாா். 3 போ் காயம் இன்றி உயிா் தப்பினாா்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.