முகப்பு
திண்டுக்கல்

வீடு தீப்பிடித்து எரிந்ததில் பணம், நகை சாம்பலாயின

தீ விபத்தால் வீட்டை இழந்த நாச்சிமுத்துக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:07 PM
பகிர்:

செம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், பணம், நகை தீயில் எரிந்து சாம்பலாயின. 

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (68). இவரது மனைவி பாப்பாத்தி (61). இந்த வயதான தம்பதியினா் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இவா்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரம், 4 பவுன் நகை எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து, தகவலறிந்த வந்த ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், அக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சக்திவேல், வருவாய்த் துறையினா் ஆகியோா் வயதான தம்பதியினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

மேலும், தீ விபத்து குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.