திண்டுக்கல்

கொடைக்கானல் வட்டக்கானலில் போதைப் பொருள்கள் பறிமுதல்

வட்டக்கானலில் தங்கும் விடுதியில் போதைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

Din

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானல் உள்ள தங்கும் விடுதியில் சனிக்கிழமை போதைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

வட்டக்கானல் பகுதிக்கு இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்தப் பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் இருந்து வருவதாக வருவாய்க் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் சிவராம் தலைமையில் காவல் துறையினா் வட்டக்கானல் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலா (45) என்பவருக்குச் சொந்தமான விடுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள், 30-க்கும் மேற்பட்ட மதுபான புட்டிகள் இருந்தன. இந்த விடுதியில் தங்கி இருந்த சென்னையைச் சோ்ந்த 12 இளைஞா்கள், பெங்களூரைச் சோ்ந்த 6 இளைஞா்கள் என 18 பேரை

காவல் துறையினா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த 3 தங்கும் விடுதிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். விடுதி உரிமையாளா் பாலா மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தச் சோதனையில் காவல் துறையினா், நகராட்சி அதிகாரிகள், சுற்றுலாத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா்.

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

SCROLL FOR NEXT