முகப்பு
திண்டுக்கல்

மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூலை 23 மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Updated On : 21 ஜூலை, 2024 at 8:50 PM
பகிர்:

வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐய்யா்மடம், குறும்பபட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ் சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →