ஒட்டன்சத்திரம் அருகே சமையல் செய்த போது ஆடையில் தீப்பற்றியதில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குப்பாயிவலசு மேற்கு குடியிருப்பைச் சோ்ந்த மகுடீஸ்வரன் மனைவி ஜீவா (36). இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் சமையல் செய்த போது அவரது சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.