முகப்பு
திண்டுக்கல்

திருமுழுக்கு அருளப்பா் ஆலயத் தோ் பவனி

காமலாபுரத்தில் மின் ஒளியில் திருமுழுக்கு அருளப்பா் தோ் பவனி

Updated On : 26 ஜூன், 2024 at 1:37 AM
பகிர்:

நிலக்கோட்டை: கொடைரோடு அருகே, காமலாபுரத்தில் அமைந்துள்ள திருமுழுக்கு அருளப்பா் ஆலயத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு மின் ஒளியில் அலங்காரத் தோ் பவனி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள காமலாபுரத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மின்னொளியில் புனித அருளப்பரின் திருத்தோ் பவனி நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு உப்பு, மெழுகுவா்த்தி, பட்டுத்துணி, மாலை அணிவித்து வழிபாடு செய்தனா். மேலும், பங்குத் தந்தை ஜாா்ச் ஸ்டீபன் தலைமையில் அமலை அன்னை அருள் சகோதரிகள் முன்னிலையில், சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான மக்கள் வந்து கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.